டெங்கு நேயைக் கட்டுப்படுத்துவதற்கான பிரச்சாரம் நேற்று தொடங்கப்பட்டது!

டெங்கு நேயைக் கட்டுப்படுத்துவதற்கான பிரச்சாரம் நேற்று தொடங்கப்பட்டது.

டெங்கு நோய் அதிகளவில் பரவல் காணப்படும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு டெங்குக் குடம்பிகளை அழித்தல் மற்றும் பரவல் வீதத்தை குறைக்கும் நடவடிக்கையும் டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக சில மாவட்டங்களில் டெங்கு நோயாளிகளின் அதிகரிப்பு அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தெரிவிக்கையில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுத்தால்தான் டெங்கு நுளம்புகளின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றமுடியும் என சுகாதாரத் திணைக்களம் கூறியுள்ளது.

கொழும்பு, கம்பா, களுத்துறை, கண்டி, காலி, இரத்தினபுரி ஆகியவை அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொழும்பில் உள்ள  50% க்கும் அதிகமான இடங்களில் டெங்கு நுளம்புத்தாக்கத்திற்கு  உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அதிக ஆபத்துள்ள பகுதிகளை குறிவைத்து நுளம்பு கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டது, இது அடுத்த புதன்கிழமை (29) வரை தொடரும்.

 

Related posts