சுவர்ணமஹால், ETI வைப்பாளர்களுக்கு நாளை நட்டஈடு!

சுவர்ணமஹால் பினான்ஸ்சியல்‌ சேர்விஸஸ்‌ PLC நிறுவனத்தின் 9,000 வைப்பாளர்களுக்கும், ETI பினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 38,000 வைப்பாளர்களுக்கும், காப்புறுதி இழப்பீட்டுத் தொகை நாளை (25) நாடு முழுவதும் உள்ள மக்கள் வங்கிக் கிளைகள் மூலமாக செலுத்தப்படும் என நிதி, பொருளாதார, கொள்கை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது சுமார் 146,000 வைப்பாளர்களுக்கு காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை பினான்ஸ் நிறுவனம் செலுத்துகின்றது.

வைப்பாளர் ஒருவர் படி உச்சபட்சமாக 600,000 ரூபா வழங்கப்படவுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 46 மக்கள் வங்கிக் கிளைகள் மூலம் இக்காப்புறுதி இழப்பீட்டுத் தொகை செலுத்தப்படவுள்ளது.

Related posts