கிறிஸ்தவர்களின் மதச் சின்னங்களை அவமதிக்கும் சீனா!

சீனாவின் அன்ஹூய் ஜியான்ங்சு, ஹேபேய் மற்றும் ஸீஜியாங் ஆகிய மாகாணங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள சிலுவைகளை அகற்றவும், வீட்டில் உள்ள இயேசுவின் படங்களை நீக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சில இடங்களில் கிறிஸ்தவர்களின் வீடுகளில் உள்ள இயேசுவின் புகைப்படங்களை அகற்றிவிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் படங்களை வைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்றொரு மாகாணமான ஷாங்ஹியில், இயேசுவின் புகைப்படங்களை அகற்றிவிட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களை வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் இந்தச் செயலானது சர்வதேச நாடுகளின் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

Related posts