ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் கிடைக்கும் புதிய அம்சங்கள்!

ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. புதிய அப்டேட்டில் ஆப் லாக், பிரைவசி செட்டிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. பிரைவசி செட்டிங் பகுதியில் மியூட்டெட் ஸ்டோரீஸ், பிளாக்டு பீப்பிள் போன்ற அம்சங்கள் காணப்படுகிறது.
நேட்டிவ் ஆப் லாக் அம்சம் பெரும்பாலான செயலிகளில் பொதுவாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆப் லாக் மூலம் பயனர்கள் தங்களது மொபைலில் மற்றவர்கள் மெசஞ்சர் செயலியை பார்க்க விடாமல் செய்ய முடியும்.
இத்துடன் பல்வேறு பிரைவசி செட்டிங் அம்சங்களையும் ஒரே மெனுவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மெனுவில் செயலியை இயக்கும் பல்வேறு கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன. எதிர்காலத்தில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய ஃபேஸ்புக் திட்டமிட்டு உள்ளது.
மெசஞ்சர் செயலியில் ஆப் லாக் அம்சம் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் இது வழங்கப்பட உள்ளது.

Related posts