பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன!

பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (27) முதல் மீள ஆரம்பிக்கப்படும் 11, 12, 13ஆம் தரங்களில் உள்ள வகுப்புகளுக்கு பிற்பகல் 3.30 மணி வரை கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வகுப்புகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களைத் தவிர, ஏனைய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கத் தேவையில்லை என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை நாளை (24) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தரம் 11, 12, 13 மாணவர்களுக்கு மாத்திரமே, எதிர்வரும் திங்கட்கிழமை (27) பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஏனைய தரங்களில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் முன்னெடுக்க, கல்வி அமைச்சு ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts