நாட்டில் மேலும் 07 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நேற்று வந்த 07 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2752 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2064 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதுடன், 677 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது வரை 11 பேர் இறந்துள்ளனர்.

Related posts