கறுப்பு ஜூலை!

கறுப்பு ஜூலை என்பது 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தமிழர் வாழ்வில் ஓர் கறை படிந்த நாள். இன்றுடன் 34 வருடங்கள் முடிவுற்ற நிலையில் காணப்படுகின்றது.

ஜூலை 24இல் இருந்து ஜூலை 27 வரையிலான காலப்பகுதியில் காடையர்களினால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டர். சிறுவர்கள்,  வயோதிபர்கள் ஏன்று கூடப் பாராமல் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன.

கொழும்பில் தொடங்கிய கலவரம் மத்தியமலைநாடு, திருகோணமலை என 7 நாட்களுக்கு நீண்டது.

ஆயிரக்கணக்கான தமிழர்களை கப்பலேற்றி ”உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்” எனக்கூறி ஆட்சியாளர்களால் யாழ். காங்கேசன்துறைத் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டும் அகதிகளாக வெளியேறினர்.

இன்றும் தாய் நாட்டுக்கு வர அஞ்சி அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்தோர் பலர்.

ஜூலை 23ஆம் திகதி  யாழ். திருநெல்வேலில் கொல்லப்பட்ட 13 படையினரின் எதிரொலியாகவே இப் படுகொலைகள் நிகழ்ந்துள்ளது.

Related posts