இலங்கையில் உள்ள சில அரிய விலங்கினங்கள் அழிவின் விளிம்பில்!

அண்மைக்காலங்களில் சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது. இதனால் இலங்கையில். உள்ள சில அரிய விலங்கினங்களும் அழிவின் விளிம்பில் உள்ளன.

சட்ட விரோதமான முறையில் இடம்பெறும் மிருகங்களை வேட்டையாடும் செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சி.சூரியபண்டாரவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரிய வகை விலங்குகளை பாதுகாப்பது அரசாங்கமொன்றின் பொறுப்பு என்பதால் இது தொடர்பாக வெகு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.

கடந்த 20ஆம் திகதி நல்லதண்ணி மாபகந்த பிரதேசத்தில் பந்தரா பாதுஸ் வகையை சேர்ந்த ஏழு வயதுடைய சிறுத்தையொன்று பொறியில் சிக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தில் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், அதன் எதிரொலியாக மிகவும் அரிய வகையிலான கறுப்பு சிறுத்தையொன்றை நாடு இழந்தமையை சுட்டிக்காட்டலாம்.

Related posts