வவுனியா கிணற்றில் வெடிபொருட்கள்!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், குறித்த கிணற்றிலிருந்து  14  மோட்டார் செல்களை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.

காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது கிணற்றில் சந்தேகமான பொருட்கள் இருந்ததையடுத்தே காணியின் உரிமையாளரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Related posts