யாழ்.பொன்னாலையில் நகைகள் கொள்ளை!

யாழ்.பொன்னாலைப் பகுதியில் நேற்று அதிகாலை கொள்ளைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

வாட்கள் மற்றும் கம்பி பொல்லுகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளது.

அதிகாலை 1.45 மணியளவில் குறித்த கும்பல் வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் வீட்டாரினால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளது.

Related posts