மோசடியில் ஈடுபட்ட உத்தியோகத்தர் கைது!

இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபையின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைவரின் போலிக் கையெழுத்துடன் மோசடியில் ஈடுபட்டமையே இதற்குக் காரமாகும்.

மேலும் இவர் மீது பல்வேறு வகையான குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளது. குடி வரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் கடிதங்களை பிழையாகக் கையாண்டமை மற்றும் போலியான விசாக்களை விநியோகித்தமை போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபையின் நிதிப்பிரிவில் பணியாற்றிய குறிப்பிட்ட நபரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர். விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

Related posts