முக்கிய பயணிகள் விமானங்களுக்கு அனுமதி!

சர்வதேச நாடுகளிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று அதிகமான காலத்தில் இலங்கைக்கு  வருவதற்கு முயற்சி செய்த அதிகாரிகளை அனுமதிப்பது தொடர்பான அறிவித்தல் ஒன்று கிடைத்துள்ளது.

இதனை ஜனாதிபதியின் பொது செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த குழுவில் பதவிக்காலம் முடிந்து திரும்பி வரும் இலங்கை இராஜதந்திரிகள்,  வெளிநாட்டு இராஜதந்திரிகள், கப்பல்களில் இருந்து வெளியேறும் கடற்படையினர் மற்றும் நாடு திரும்பும் இராணுவ வீரர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் திட்டங்களில் ஈடுபட்டுள்ள முதலீட்டு வாரிய ஊழியர்கள்  ஆகியோர் அடங்குவர்  என்றும் அவர் விளக்கினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இன்று கட்டாரிலிருந்தும் 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு விமானம் ஒன்று வந்தது என்றும் பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு இராணுவத்தினர் மூலம் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Related posts