பொலிவியாவில் கண்டெடுக்கப்பட்ட 400-க்கும் அதிகமான சடலங்கள்!

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கொரோனா தாண்டவமாடி வருகிறது. 5 நாட்களில் 400 க்கும் அதிகமான சடலங்கள் தெருக்களிலும், வீடுகளிலும் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 48 லட்சத்தை கடந்தது. நோய் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.14 லட்சத்தை தாண்டியது.

அதிகபட்சமாக அமெரிக்காவில் 39 லட்சத்து 70 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அங்கு ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசிலில் 21 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கும், இந்தியாவில் 11 லட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கும், ரஷ்யாவில் 7 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 86 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரிசோதனையை வேகப்படுத்தியுள்ள நாடுகளில், அதிகம் பாதிப்பு கண்டறியப்பட்டாலும் சிகிச்சை முறைகள் காரணமாக அவர்கள் குணமடைய ஒரு வாய்ப்பு உள்ளது.

Related posts