பொலிகை கரையோர அபிவிருத்தி சங்கத்தால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி

வடமராட்சி கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்துதல், கடல் அட்டைகள் பிடித்தல் போன்ற சடடவிரோத மீன்பிடி செயல்களில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களின் செயற்பாடுகளை கண்டித்தும், இவ் விடயத்தை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும் , மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட போவதில்லை என வடமராட்சி பகுதி மீனவர்களால் தொழில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எமது பொலிகை கரை உறவுகளும் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். இதனால் தொழில் இன்றி இன்னலுறும் 20 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் இன்று பொலிகை கரையோர அபிவிருத்தி சங்கத்தால் வழங்கி வைக்கப்பட்டன.

Related posts