புத்தளப் பகுதியில் உப்புச் செய்கை பாதிப்பு!

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக உப்பு செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

உப்பு செய்கை மேற்கொள்ளப்படும் வயல்களில் வெள்ள நீர் புகுந்துள்ளமை, நீரில் உப்புத்தன்மை குறைவடைந்துள்ளமை போன்ற காரணங்களினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பு காரணமாக உப்பின் விலை அதிகரித்துள்ளதாகத்  தெரியவருகின்றது.

வெள்ள நீர் புகுந்தமையால் , 7500 டன் உப்பு அழிந்ததாகவும்  உப்பு விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், மழைக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக சுமார் 1000 டன் உப்பு சேமிக்கப்பட்டது.

புத்தளம் – பழைய மன்னார் பாதையில் சுமார் 5000 விவசாயிகள் 2000 ஏக்கரில் உப்பு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts