கண்டியில் ட்ரோன் கமெரா ஒன்று விழுந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமெரா ஒன்று, நேற்றுமுன் தினம் இரவு 10.30 மணியளவில் விழுந்துள்ளது.
பைரவகந்த தனியார் விடுதியில் தங்கியிருந்தவாறு, கண்டி நகரைப் படம் பிடிப்பதற்காக அனுப்பப்பட்ட ட்ரோன் கமெராவே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது.
நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப்பயணியான உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரின் செயற்பாடு எனப் பின்னர் அறியவந்ததைத் தொடர்ந்து அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.