சமுர்த்தியின் கடன் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்!

சமுர்த்தி உதவி பெறுவோருக்கு சுயதொழில் மற்றும் சிறு வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டு வந்த வட்டி இல்லாத கடன் வழங்கும் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் பாதிப்பு சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேற்படி கடன் வழங்கும் செயற்பாடுகள் நேற்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்தது.

Related posts