கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி!

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்தது.

இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த இங்கிலாந்து அணி 469 ஓட்டங்களுக்கு டிக்ளர் செய்தது. அதன்பின் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 287 ஓட்டங்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 129  ஓட்டங்களை சேர்த்து டிக்ளர் செய்திருந்தது.

இதையடுத்து, 312 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர்கள் சொட்ப ஓட்டங்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால், இங்கிலாந்து அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related posts