இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

நாட்டில் இன்றைய தினம் இதுவரை 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பி 14 பேருக்கும், கந்தக்காடு தொற்றாளருடன் தொடர்பை பேணிய ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  2745 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2064 பேர் குணமடைந்துள்ளதோடு , 670 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்கை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, 107 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில்  கொரோனா  தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

Related posts