இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,724 பேருக்கு கொரோனா பாதிப்பு!

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,724 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,55,191லிருந்து 11,92,915ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,084லிருந்து 28,732ஆக உயர்ந்து உள்ளது.
இந்தியா 22 நாட்களில் 607,422 கொரோனா பாதிப்புகளையும்களையும், எட்டு நாட்களில் 256,734 பாதிப்புகளையும் பதிவு செய்து உள்ளது.  என கூறி உள்ளது.
மத்திய சுகாதாரத் துறை சிறப்பு முதன்மை அதிகாரி ராஜேஷ் பூஷண் கூறியதாவது:-
ஜூலை 17ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சதவிகிதம் 3.36 லிருந்து 2.43ஆகக் குறைந்துள்ளது. இந்த தரவுகள், நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதை காட்டுகின்றன.
இந்தியாவில் இறப்பு சதவீதம் குறைந்து உள்ளது -மத்திய சுகாதாரத் துறை
நாட்டில் கொரோனா தொற்றை 5 சதவீதத்திற்கும் குறைவாகக் கொண்டு வர வேண்டும் என இலக்கு வைத்து பணிகளைச் செய்து வருகிறோம். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நம் நாட்டில் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகள் குறைவாக உள்ளன.
நாட்டில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டால் அதில் 20. 4 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். அதுவே உலகளவில் இந்த இறப்பு விகிதம் 21 முதல் 33 மடங்கு வரை உள்ளது. ஜூலை 17ஆம் தேதி நிலவரப்படி, கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சதவிகிதம் 3. 36 லிருந்து 2. 43ஆகக் குறைந்து உள்ளது.
கொரோனா பரிசோதனைகளை பொருத்தமட்டில் சராசரியாக நாட்டில் 10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. பரிசோதனைகளைத் துரிதப்படுத்துவதன் மூலம் நோய் பாதிப்பு சதவிகிதம் 5 சதவிகிதமாகக் குறைந்து விடும் என நம்பப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றை இந்தியா மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று எதிர்ப்புப் பணிகளை மேற்கொள்ள அனைத்து மாநில அரசுகளுடனும் மத்திய அரசு இணக்கமாகச் செயல்பட்டு வருகிறது. வல்லுநர்களின் வழிக்காட்டுதல்படியே அனைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts