இணையத்தின் ஊடாக பிறப்புச் சான்றிதழ் விரைவில்!

இணையத்தின் ஊடாக பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு  நடவடிக்கை எடுப்பதாகப் பதிவாளர் நாயகம் என்.சி விதானகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாய் ,தந்தையரின் திருமண விபரங்கள் தொடர்பில் சமூகத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு இனிவரும் காலங்களில் பிறப்புச் சான்றிதழில் தாய் , தந்தையின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் காணிப் பதிவுச் சான்றிதழையும் இணையத் தின் ஊடாக வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts