பிரேசில் நாட்டில் கொரோனாவுக்கு 80 ஆயிரம் பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றானது உலகநாடுகளை பீதி கொள்ளச் செய்துள்ளது. அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதல் நிலையிலுள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்த படியாக உள்ள பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது.

பிரேசில் நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கொரோனாவால் பாதிக்க்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 21,749 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 21 ஆயிரத்து 645 ஆக அதிதரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 718 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்த பலியானோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியது.

கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களில் 14 லட்சம் பேர் குணமடைந்தனர். இந்நிலையில் இரண்டு பிரேசில் நாட்டு அமைச்சர்களுக்கு கொரோனா உறுதியானது குடியுரிமை அமைச்சர் ஒனிக்ஸ் லோரன்ஜோனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் அதிபர் போல்சோனரோவுக்கு நெருக்கமான நண்பர் ஆவார்.

Related posts