தபால் மூல வாக்களிப்பு ; இறுதி நாள்!

இன்று  தபால் மூல வாக்களிப்பினை பதிவுசெய்யும் இறுதி நாளாகும்.

பொதுத் தேர்தலுக்கான (2020) தபால் மூல வாக்களிப்பு பணிகளானது கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகிது.

இம்முறை பொதுத் தேர்தலுக்கு மொத்தமாக 705,085 தபால் மூல வாக்காளர்கள் வாக்கினை அளிக்க தகுதி பெற்றிருந்தனர்.

குறித்த தினங்களில் தங்கள் வாக்கினை பதிவுசெய்ய தவறிய அரச ஊழியர்களின் நலன் கருதி  இன்றும்  வாக்கினை அளிப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா அச்சம் காரணமாக அநுராதபுரம், ராஜாங்கனை பிரதேச செயலர் பிரிவில் தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts