கொவிட் -19   கடமைகளில் இருந்து அனைத்து இலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர்கள் சங்கம் விலகல்!

அனைத்து இலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர்கள் சங்கம் ((ACDPAA)) கொவிட் -19   கடமைகளில் இருந்து இன்று விலக முடிவு செய்துள்ளது.

அண்மையில் பொது சுகாதார அதிகாரிகள் எடுத்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நாட்டில் கொவிட் -19 வைரஸ் தொற்று சந்தேக நபர்களுக்கு பி.சி.ஆர் (PCR)  சோதனைக்கு உதவுதல்,   கிருமி நீக்கம் செய்தல், பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துதல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைக்கு உதவுதல் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

இதனை  அனைத்து இலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர்கள் சங்கத்தின் செயலாளர் திரு. சுரங்க தர்ஷனா உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts