ஐ.சி.சி ஆண்களுக்கான 2020 ரி20 உலகக் கிண்ண தொடர் ஒத்திவைப்பு!

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக  அவுஸ்திரேலியாவில் இடம்பெறவிருந்த ஐ.சி.சி ஆண்களுக்கான 2020 ரி20 உலகக் கிண்ண தொடர்,  அடுத்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சியின் வணிக துணை நிறுவனமான IBC சபையின் நேற்றைய கூட்டத்தில், அடுத்த மூன்று ஐ.சி.சி ஆண்கள் நிகழ்வுகளுக்கான திகதிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு அதற்கான புதிய திகதிகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, ICC தெரிவித்துள்ளது.

இதன் மூலம் எதிர்வரும் மூன்று வருடங்களில் கிரிக்கெட் விளையாட்டுக்கு COVID-19 தொற்றினால் ஏற்பட்டுள்ள பின்னடைவிலிருந்து அதனை மீட்க சிறந்த வாய்ப்பை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்கள் நிகழ்வுகளுக்கான அட்டவணைகள்:

  • ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணம் 2021: ஒக்டோபர் – நவம்பர் 2021 – இறுதிப் போட்டி நவம்பர் 14, 2021
  • ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணம் 2022: ஓக்டோபர் – நவம்பர் 2022 – இறுதிப் போட்டி நவம்பர் 13, 2022
  • ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2023: ஒக்டோபர் – நவம்பர் 2023 இந்தியாவில் நடைபெறும் – இறுதிப் போட்டி நவம்பர் 26, 2023

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் விளையாட்டை பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான உலகளாவிய நிகழ்வுகளாக அரங்கேற்ற முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, எதிர்கால போட்டிகளை நடாத்தும் நாடுகள் குறித்து கருதப்படும் முடிவை எடுப்பதற்காக விரைவாக மாறிவரும் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கவும் கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் மதிப்பீடு செய்யவும IBC இதன்போது உடன்பாட்டுக்கு வந்துள்ளது.

Related posts