இறுதி மூன்று கடற்படையினரும் நலமடைந்து வெளியேறினர்!

வெலிசறை கடற்படை முகாமில் இருந்த இறுதி மூன்று கடற்படையினரும் கொவிட்-19 இலிருந்து முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று வெளியேறினர்.

வெளியேறிய  இந்த கடற்படை வீரர்கள் 14 நாட்கள் மேலும் தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்கும் படி கோரப்பட்டுள்ளனர்.

இதுவரை, வெலிசரை கடற்படை முகாமில் இருந்து  906 கடற்படையினர் நலமாகி வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts