ஆடை நிறுவனத்திற்கு அபராதம்!

அவுஸ்திரேலியாவில் ஆடைகள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் தங்கள் உடற்பயிற்சி  ஆடைகள் கொவிட்–19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று கூறி விளம்பரப்படுத்திய குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதை அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தினார்கள்.

லோர்னா ஜேன் எனப்படும் அந்த நிறுவனத்திற்கு சுமார் 28,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

இணையத்தளத்தில் விற்பனைக்குள்ள உடற்பயிற்சி ஆடைகள் பலவகை வைரஸ் தொற்றிலிருந்தும் கொவிட்–19 நோய்த் தொற்றிலிருந்தும் பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Related posts