வெலிக்கட சிறைச்சாலையில் திடீர் சோதனை!

வெலிக்கட சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நேற்று (19) முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது,29 கையடக்கத்தொலைபேசிகளும், 170 மின்கலன்களும் மீட்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவால் இந்த திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெனிய பதவியேற்று ஒரு மாதக் காலப்பகுதிக்குள் சிறைச்சாலைகளிலிருந்து 1,135 கையடக்கத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என, சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts