விபத்தில் இராணுவ வீரர் பலி!

நுகேகொடை மேம்பாலத்தில் இன்று (20) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் பலியானார்.

தனியார் பஸ் மற்றும் இராணுவ கெப் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கிய பயணித்த பஸ் ஒன்றை மற்றுமொரு பஸ் முந்திச்செல்ல முற்பட்ட போது எதிரில் வந்த கெப் வாகனத்துடன் மோதியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பனாகொடை இராணுவ முகாமைச் சேர்ந்த கெப் வாகனத்தில் சாரதியாக பணியாற்றி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts