வடமராட்சியில் மீனவர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வடமராட்சியில் மீனவர் சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.  வடமராட்சிப்பகுதிகளில்  தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்துதல், கடல் அட்டைகள் பிடித்தல் போன்ற சடடவிரோத மீன்பிடி செயல்களில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களின் செயற்பாடுகளை கண்டித்தும், இவ் விடயத்தை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும் , மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட போவதில்லை என வடமராட்சி பகுதி மீனவர்களால் தொழில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக எமது பொலிகை கரை உறவுகளும் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

தொண்டமானாற்றிலிருந்து கற்கோவளம் வரையான கடற்தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்துகின்றன.

அண்மைக் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் வடமராட்சிப்பகுதிகளில்  அதிகரித்தால் இப்பகுதி மக்களின் மீன்பிடித்தொழில் பாதிப்படைந்ததுடன் அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குரியதாகிவிட்டது.

 

Related posts