போக்கு வரத்துத் துறை வீழ்ச்சி அடையும் நிலை!

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு நாளாந்தம் சுமார் பத்து மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக் காரணமாக பொதுப் போக்கு வரத்துச் சேவையின் ஊடாக பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்ததன் காரணத்தினால் போக்கு வரத்துத் துறை வீழ்ச்சி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை போக்கு வரத்துச் சபைக்கு சொந்தமான 5,300 பஸ்கள் நாளாந்தம் குறைந்த வருமானத்திலேயே சேவையில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts