பெருமைமிக்க விநாயகர் வழிபாடு!

பெருமைமிக்க விநாயகர் வழிபாட்டில் குட்டுப் போட்டு கும்பிடுதல் என்பது
‘குட்டுப் போட்டாலும் மோதகக் கையான்பால் குட்டுப் போட வேண்டும்’ என்ற பழமொழிதான் ‘குட்டுப்பட்டாலும் மோதிரக் கையான்பால் குட்டுப் பட வேண்டும்’ என்று மாறியது.
பொதுவாக வழிபாடுகள் என்பது நமது உள்ளத்திற்கு மட்டுமல்ல, உடலிற்கும் நன்மை பயப்பதாக அமைகின்றது. இறைவழிபாட்டுத் தத்துவத்தை அழகாக முன்னோர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.
தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கர்ணம் போடுகின்றோம். இது ஒரு அற்புதமான உடற்பயிற்சி என்றும், இதை குழந்தைகள் செய்யும் பொழுது மூளைக்கு ரத்தம் அதிகமாக பாய்கிறது. மூளையில் உள்ள பகுத்தறியும் நரம்பு தூண்டப்படுகின்றது. அதன் மூலமாக அறிவாற்றல், நினைவுத் திறமை, கல்வி வளம் கிடைக்கின்றது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

Related posts