உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

க.பொ.த. உயர் தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்

கல்வி அமைச்சில் இன்று (20) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையை, ஒக்டோபர் 09ஆம் திகதி முதல் நவம்பர் 16ஆம் திகதி வரை வழங்கவும் அமைச்சு தீர்மானித்துள்ளது.

 

Related posts