உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் இன்று அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றுக்கான புதிய திகதிகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று காலை கல்வியமைச்சில் இடம்பெறும் கலந்துரையாடல்களின் பின்னர், குறித்த பரீட்சை திகதிகள் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. இதனால் உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை ஒத்தி வைப்பதற்கு கல்வி அமைச்சு ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

 

Related posts