இன்றைய காலநிலை!

இலங்கையில் மேல் , சப்ரகமுவ , மத்திய , தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான சீரற்ற காலநிலை தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்மாகாணங்களில் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 வரை சில பிரதேசங்களில் 200 மில்லி மீற்றரை அண்மித்தளவில் மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது.

கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேசத்தில் 201 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதே போன்று காலி – ஹியாரே பிரதேசத்தில் 160 மில்லி மீற்றர் , அதுகந்துர பிரதேசத்தில் 137 மில்லி மீற்றர் , களுத்துறை – மீகஹாதென்ன பிரதேசத்தில் 117 மில்லி மீற்றர் , இரத்தினபுரி – பரகடுவ பிரதேசத்தில் 106 மில்லி மீற்றர் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொட பிரதேசத்தில் 109 மில்லி மீற்றர் , பஸ்யால பிரதேசத்தில் 100 மில்லி மீற்றர் , காலி மாவட்டத்தில் ஹேகொட பிரதேசத்தில் 82 மில்லி மீற்றர் , மெனிக்கந்த பிரதேசத்தில் 78 மில்லி மீற்றர் மற்றும் யக்கலமுல்ல பிரதேசத்தில் 74.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியது.

Related posts