மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ வீரர் ஒருவர் படுகாயம்!

மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இன்று கைதடியில் நடைபெற்றது. சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது.

இன்று (19) மதியம் குறித்த சோதனைச் சாவடியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை கடமையிலிருந்த இராணுவ வீரர் மறித்துள்ளார்.

இதன்போது  வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இராணுவ வீரர் மீது மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த இராணுவ வீரர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து மோதிய இளைஞனை சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

Related posts