பொலிகை கரையோர அபிவிருத்திச் சங்கத்தின் முதற்கட்ட உதவி

பொலிகை கரையோர அபிவிருத்திச் சங்கத்தின் முதற்கட்ட வாழ்வாதார மற்றும் கல்வி உதவி வழங்கும் நிகழ்வு சங்கத்தின் தலைவர் மூத்ததம்பி கந்தசாமி அவர்களின் தலைமையில் இன்று (19/07/2020) ஞாயிறு மாலை 5.00 மணியளவில் பொலிகண்டி கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் இடம்பெற்றது.

தெரிவு செய்யப்பட 19 பேரில் 17 பேருக்கு வாழ்வாதார உதவியும் இருவருக்கு கல்வி உதவியாக துவிச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பொலிகண்டி கிழக்கு கிராம அலுவலர் M. தர்ஷாந்தன் , வடமராட்சி வடக்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ப.சர்மிளன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பயனாளர்களும் நலன்விரும்பிகளும் பொதுமக்களும் என பலரும் கலந்து கொண்டனர்.

எந்த தடை வந்தாலும் தடைகளைத் தாண்டி தொடர்ந்து ஊரின் வளர்ச்சிக்காக இந்த சங்கம் பாடுபட வேண்டும் என பலரும் உரையாற்றும் போது தெரிவித்தனர்.Related posts