செவ்வாய்கிழமை முதல் தனியார் பேருந்து சேவைகள் 50வீதத்தினால் குறைக்கப்படுகிறது!

செவ்வாய்கிழமை முதல் தனியார் பேருந்து சேவைகள் 50 வீதத்தினால் குறைக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

குறைந்தளவு மக்களே பேருந்துசேவையை பயன்படுத்துவதால் ஏற்படும் நட்டத்தினை ஈடுசெய்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்.டுள்ளார்.
தனியார் பேருந்து சேவையை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவசியமான சலுகைகளை தாங்கள் கோரியபோதிலும் அவை வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts