கொரோனா அருகில் நெருங்கியுள்ளது அவதானம்!

கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் நூற்றுக்கு நூறு வீதம் பரவியுள்ளதாக கூற முடியாது என்றும் அதற்கு அருகில் நெருங்கியுள்ளதாக விசேட வைத்தியர் லலந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், இரண்டாவது அலை ஏற்படும் இறுதி நிலையை அண்மித்துள்ளதாக விசேட வைத்தியர்களின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது, நாட்டின் நிலைமை தொடர்பில் விசேட வைத்தியர் என்ற ரீதியில் வருத்தமடைவதாக, சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் லலந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு மேலும் தெரிவித்ததாவது,

இன்று ஏற்பட்டுள்ள நிலைமை எந்த திசையில் திரும்பும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கொரோனவின் ஆரம்ப காலப்பகுதியில் இலங்கை முகம் கொடுத்த முறை மிகவும் சிறப்பானதாகும். அதனைக் குறித்து திருப்தி அடைய முடியும்.

அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் தவறான விழிப்புணர்வு காரணமாக மக்கள் குழப் பமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts