கொரோனா அச்சம்!

கொரோனா அச்சம் காரணமாக மக்களிடையே அச்ச உணர்வு தலை தூக்குவதாக சமூக ஆர்வலர்கள் பல்வேறு கருத்துக்களை நாளாந்தம் முன் வைத்துக்கொண்டு தான் வருகின்றனர்.

அண்மைக்காலங்களில் கொரோனா பாதிப்புக்கள், தொற்றும் வீதம் பற்றி சிரேஷ்ட வைத்தியர்களின் கருத்துக்கள் பீதியை தருவதாக உள்ளது. மேலும் வரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து சகல தனியார் பஸ்களும் அவற்றின் சேவையை 50 வீதமாக குறைத்தலானது மக்கள் தமது வெளிப்பயணங்களை குறைத்துள்ளதை  உணர்த்துகின்றது.

எனவே அனைவரையும் சுகாதார முறைகளை கடைப்பிடித்து தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து வரவிருக்கும் ஆபத்திலிருந்து தங்களையும் குடும்பத்தையும் சுற்றத்தையும் பாதுகாக்க வேண்டும்.

 

Related posts