ஆடி அமாவாசை நாளை!

இறைவனை வழிபடவும், முன்னோர்களுக்கு மரியாதையும், வழிபாடும் செய்வதற்கான அற்புதமான மாதம் தான் ஆடி மாதம்.

முன்னோர்களுக்குத் தர்ப்பணம், பிரார்த்தம் செய்ய மிக உகந்த நாள் அமாவாசை. அதிலும் குறிப்பாக மூன்று அமாவாசை தினங்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை (புரட்டாசி), தை அமாவாசை ஆகியவை முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க மிகவும் சிறப்பானது.

நாளை  (20) ஆடி அமாவாசை விரதம்  வருகிறது. இன்று  (19) இரவு 12.17 மணிக்கு தொடங்கும் ஆடி அமாவாசைவிரதம்,  நாளை (20)  இரவு 11.35 மணி வரை உள்ளது.

Related posts