கொழும்பில் 10 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பில் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை  இரவு 08 மணிமுதல் 10 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட இருப்பதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 13, கொழும்பு 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் இன்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணிவரை அமுலில் இருக்கும்.

கொழும்பு 11 மற்றும் கொழும்பு 12 இல் குறைந்த அழுத்தத்தினுடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குழாய்களில் திருத்த வேலை மேற்கொள்ளப்பட இருப்பதால் நீர் வெட்டு அமுல்செய்யப்பட இருப்பதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவிக்கின்றது.

Related posts