காட்டு யானை தாக்கி தம்பதியினர் பலி!

புத்தல, ஒக்கம்பிடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பேயாய பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். நேற்றுக் காலை(17) இறப்பர் பால் வெட்டிக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவத்தில் 57 வயதுடைய பெண் ஒருவரும் 70 வயதுடைய அவரது கணவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளான குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts