அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் !

இந்தியா பிராந்தியத்தின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ புவியியல் ஆய்வு பூகம்ப எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் 6.1  ரிச்டர் அளவுகோலில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது இன்று பிற்பகல் 02.03 மணியளவில் உணரப்பட்டுள்ளது.

இதே வேளை கடந்த 13 ஆம் திகதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 4.3 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் பதிவாகியதாக நில அதிர்வுக்கான தேசிய நிலையம் (NCS) தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இலங்கை அந்தமான் தீவிலிருந்து 1000 கி.மீ தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts