மண்டைதீவில் கஞ்சா மீட்பு ; இருவர் கைது!

யாழ். மண்டைதீவு கடற்பகுதியில் நேற்று (16) 111 கிலோ கஞ்சா  மீட்கப்பட்டுள்ளது. கஞ்சாவைக் கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்டைதீவு கடற்பரப்பில் பயணித்த படகினை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போது கஞ்சா மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாசையூர் மற்றும் நாவாந்துறை பகுதிகளை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

Related posts