பிரான்ஸில் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமடையும் கொரோனா!

பிரான்ஸின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை சற்றுத் தீவிரமடைந்து வருகிறது. பாரிஸ் பிராந்திய மருத்துவமனைகளிலும் வைரஸ் தொற்றாளர்களின் வருகை லேசாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

கடந்த ஒருவார கால அவதானிப்புகளின் படி அம்புலன்ஸ் சேவைகளுக்கும்(Samu) அவசர மருத்துவர்களுக்கும்(SOS) உதவி கேட்டு வரும் அழைப்புகள் அதிகரித்துள்ளன.

‘பிரான்ஸ் இன்ரர்’ செய்தி ஏஜென்ஸிக்கு இன்று செவ்வி அளித்த சுகாதார அமைச்சர் ஒலிவர் வேரன்(Olivier Véran) இத்தகவல் களை உறுதிப்படுத்தி உள்ளார்.
நாட்டின் வடமேற்கே உள்ள மயேன்( Mayenne) என்னும் பகுதி மிக மோசமாக வைரஸ் பரவ லால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலைமை எச்சரிக்கை அளவை தாண்டியுள்ளது. மூடி முடக்கப்படவேண்டிய கட்டத்தை எட்டியுள்ள அந்தப் பகுதியில் வாழும் சுமார் ஒரு லட்சம் மக்களையும் வைரஸ் சோதனைக்கு உட்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.புதிதாக மேலும் வைரஸ் தொற்றுக்கள் கொத்தாக அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.

Related posts