தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய குழு இன்று வருகின்றது!

பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அதனை கண்காணிப்பதற்காக பலர் விருப்பம் தெரிவித்த போதிலும் கொரோனா தடுப்பு முறையின் கீழ் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும் நடைமுறையால் பலரின் வருகை தடைப்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் முதலாவது அணி இன்று காலை நாட்டிற்குள் வருகை தருகின்றது.

இவ்வாறு வருகை தரும் முதலாவது அணியில் 4 பேர் மட்டுமே வருகை தருவதோடு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு எதிர் வரும் முதலாம் திகதி முதல் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். இதேநேரம் மேலும் ஒரு அணி விரைவில் தாய்லாந்தில் இருந்தும் வருகை தரவுள்ளது.

Related posts