கொரோனா தடுப்பு மருந்துகளை திருடும் முயற்சி!

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆய்வகங்கள் மீது சைபர் தாக்குதலில் ஈடுபட்டு, தடுப்பு மருந்துகளை திருடும் முயற்சியில் ரஷ்ய ஹேக்கர் குழுவினர் இறங்கியுள்ளதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மூன்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ரஷ்யா அதன் ஹேக்கர்களை பயன்படுத்தி கொரோனா வைரஸ் மருந்து தயாரிக்கும் ஆய்வக கணிகளை ஹேக் செய்து அறிவு திருட்டில் ஈடுபட்டு வருவதாக இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் வியாழனன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையை கனடாவின் தகவல் தொடர்பு பாதுகாப்பு ஸ்தாபனம் (CSE), அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சைபர்-பாதுகாப்பு உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் (CISA) மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) மற்றும் இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) ஆகியவை வெளியிட்டுள்ளன.

Related posts