யாழில் சந்தேக நபர் கைது!

 

யாழ்ப்பாணத்தில் சந்தேக நபர் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், பாசையூரைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே நேற்றிரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி வைத்தியசாலை வீதியில் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்டமை மற்றும் 2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து வாள் ஒன்று, இரும்பு குழாய்கள், விக்கெட் கட்டை மற்றும் ஜக்கட் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts