புதிய கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் நேற்றைய தினம் 09 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 2,674 ஆக உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 09 பேரில் கட்டார் கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய தலா நால்வர் அடங்குகின்றனர்.

அத்துடன் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவரும் இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய மொத்தம் 846 இலங்கையர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கந்தக்காடு மற்றும் சேனபுரா புனர்வாழ்வு நிலையக் கைதிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களிடமிருந்து மொத்தம் 533 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 2001 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்தும் உள்ளனர். அதேநேரம் தற்போது கொரோனா தொற்றாளர்களாகவுள்ள 662 பேர் நாடு முழுவதும் உள்ள எட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 150 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts